Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஃபிடெல் காஸ்டோவிற்கு இரங்கல் தெரிவித்து சிக்கலில் மாட்டினார் ஜஸ்ரின் ஸ்ரூடோ

In கனடா
Updated: 11:16 GMT, Nov 27, 2016 | Published: 10:53 GMT, Nov 27, 2016 |
0 Comments
1245
This post was written by : Sambavi

கியூபாவின் முன்னாள் தலைவர் ஃபிடெல் காஸ்டரோவின் மறைவிற்கு தனது டுவிட்டர் கணக்கின் ஊடாக இரங்கல் தெரிவித்திருந்த ஜஸ்ரின் ஸ்ரூடோ கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.

மறைந்த கியூப தலைவர் ஃபிடெல் காஸ்ரோவின் புரட்சி மற்றும் கொள்கைகள் தொர்பில் இரு வேறு கருத்துக்கள் பரவலாக காணப்படுகின்ற நிலையில், ஸ்ரூடோவின் இரங்கல் செய்தி சில எதிர்ப்புக்களை சம்பாதித்துள்ளது.

நேற்று காலை டுவிட்டரில் பதிவிட்ட ஸ்ரூடோ, பழம்பெரும் புரட்சியாளர் மற்றும் சொற்பொழிவாளர் என ஃபிடெல் காஸ்ரோ குறித்து பதிவிட்டிருந்தார். மேலும், அவர் தன்னுடைய தந்தைக்கு நல்ல நண்பர் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த நிலையிலேயே ஃபிடெல் காஸ்ரோவின் கொள்கை எதிர்ப்பாளர்கள் பலரும் ஜஸ்ரின் ஸ்ரூடோவின் பதிவிர்க்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக கன்சவேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லிஷா ரயிட்ர் உள்ளிட்ட பலரும் காஸ்ரோ ஒரு சரவதிகாரி என்றும் அவரால் பல பெண்கள் மற்றும் குழந்தைகள் கூட உயிரிழந்துள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், கன்சவேட்டிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மக்ஷிம் பேர்னியர் செய்துள்ள பதிவில், கியூபாவின் நீண்டகால ஆட்சியாளர் ஃபிடெல் காஸ்ரோ என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், அதன் அர்த்தம் அவர் ஒரு சர்வதிகாரி என ஸ்டோவிற்கு தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் கனடா மற்றும் சர்வதேச அளவில் ஸ்ரூடோவின் இரங்கல் பதிவிற்கு எதிர்ப்புக்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg