Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: ரயில்கள் வேற்றுப்பாதையில் பயணம்

In கனடா
Updated: 16:14 GMT, Nov 28, 2016 | Published: 12:16 GMT, Nov 28, 2016 |
0 Comments
1426
This post was written by : Sambavi

கனடாவில் நெடுஞ்சாலை 20இல் கார்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதால் அருகில் இருந்த ரயில் தண்டவாளம் சேதமடைந்துள்ளது.

இதனால் நேற்று (சனிக்கிழமை) மாலையில் இருந்து குறித்த வழியாக பயணிக்கும் ரயில்கள் அனைத்தும் மாற்றுப்பாதைகளுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.

இரண்டு கார்களும் மோதி விபத்துக்குள்ளான போது அதில் ஒரு கார் சுழன்று அருகில் இருந்த தண்டவாளத்தில் வீழ்ந்துள்ளது. இதன் காரணமாக தண்டவாளம் சேதமடைந்துள்ளது.

இதேவேளை விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்த தகவல்கள் எவையும் வெளிவராத நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும், காரில் இருந்தவர்களுக்கு உயிராபத்துக்கள் எவையும் இல்லை என்றும் வாகனங்கள் மாத்திரமே பலத்த சேதத்தினை சந்தித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg