Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தல்: வேட்பாளராக தன்னை உறுதி செய்தார் ஃபிலோன்

In ஐரோப்பா
Updated: 04:55 GMT, Nov 28, 2016 | Published: 04:44 GMT, Nov 28, 2016 |
0 Comments
1250
This post was written by : Sambavi

பிரான்ஸில் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பினை முன்னாள் பிரதமர் பிரான்கொய்ஸ் ஃபிலோன் கைப்பற்றியுள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கென்சவேட்டிவ் கட்சியின் வேட்பாளர் தெரிவு வாக்கெடுப்பில் ஃபிலோன் வெற்றிபெற்று ஜனாதிபதி வேட்பாளராக தன்னை உறுதிப்படுத்தியுள்ளார்.

அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் பிரான்ஸின் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் அதற்கான கன்சவேட்டிவ் கட்சி தன்னுடைய வேட்பாளரை தெரிவு செய்யும் பணியில் கடந்த சில வாரங்களாக ஈடுபட்டிருந்தது.

இந்த நிலையில், முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த வாரம் இடம்பெற்றிருந்த நிலையில் போட்டியிட்ட 7 பேரில் இருவர் தெரிவு செய்யப்பட்டு ஏனைய ஐவரும் நீக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் தெரிவு செய்யப்பட்டிருந்த ஃபிலோன் மற்றும் அலைன் ஜுப்பே இருவருக்கும் இடையில் வேட்பாளர் தெரிவிற்கான இறுதி வாக்குப்பதிவு நேற்று இடம்பெற்றது.

இதற்கமைய எதிர்பார்த்தது போன்றே ஃபிலோன், அலைன்னைக் காட்டிலும் அதிக ஆதரவைப் பெற்று வேட்பாளராகியுள்ளார். நேற்றைய வாக்குப்பதிவில் 67சதவீத வாக்குகளை பெற்றுள்ள அவர் இலகுவெற்றியை பெற்று ஜனாதிபதி வேட்பாளராக தெரிவாகியுள்ளார்.

இந்த நிலையில், எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் கன்சவேட்டிவ் கட்சியின் வேட்பாளராக களமிறங்கும் ஃபிலோன் தீவிர வலது சாரித் தலைவர் Marine Le Penனை எதிர்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg