Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நபா மத்திய சிறைச்சாலை உடைப்பு: பிரதான சூத்திரதாரி கைது

In இந்தியா
Updated: 12:22 GMT, Nov 28, 2016 | Published: 05:14 GMT, Nov 28, 2016 |
0 Comments
1341
This post was written by : Elakkiya

பஞ்சாப் மாநிலம் நபாவில் மத்திய சிறைச்சாலையை உடைத்து சிறையிலிருந்த காலிஸ்தான் தீவிரவாத இயக்கத் தலைவர் ஹர்மீந்தர் சிங் மின்டு மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பஞ்சாப் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த இந்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான பர்மிந்தர் என்பவர் இந்தியாவின் வடக்கு மாநிலமான உத்தரப்பிரதேஷ் மாநிலத்தின் ஷாம்லி நகரத்தில் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் உத்தரபிரதேசத்தல் இருந்து நேபாளத்திற்கு தப்பிச் செல்ல முனைந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸ் கூடுதல் பணிப்பாளர் நாயகம் தல்ஜீத் சிங் சௌத்திரி தெரிவித்தள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், ‘ உத்தரபிரதேசத்திலிருந்து நேபாளம் வரையான அனைத்து வீதிகளிலும் எச்சரிக்கை விடுத்திருந்தோம். குறித்த பகுதிகளில் வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டன. இதன்போதே சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் ஒருவரான பர்மிந்தர் கைது செய்யப்பட்டார். அவருடைய வாகனத்திலிருந்து வெடிபொருட்களை மீட்டுள்ளோம். அத்துடன் அவர் வைத்திருந்த ஆயதத்தினையும் கைப்பற்றியுள்ளோம். அவர் தனது குற்றத்தினை ஒப்புக் கொண்டுள்ளார்.’ என்று தெரிவித்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்ற இந்த சிறைச்சாலை உடைப்பு சம்பவத்தில் காலிஸ்தான் தீவிரவாத இயக்கத் தலைவர் ஹர்மீந்தர் சிங்குடன் மேலும் ஐந்து கைதிகள் தப்பிச் சென்றனர்.

தீவிரவாதத்துடன் தொடர்புடைய சுமார் பத்து வழக்குகளின் பிரகாரம் ஹர்மீந்தர் சிங் கடந்த 2014 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தாய்லாந்திலிருந்து  டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்தபோது இவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg