Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இளம் வீரர்கள் பாதிப்பு: இந்திய அணிக்கு பின்னடைவு

In கிாிக்கட்
Updated: 08:18 GMT, Nov 28, 2016 | Published: 08:18 GMT, Nov 28, 2016 |
0 Comments
1142
This post was written by : Anojkiyan

இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணியில், இளம் வீரர்களான கே.எல் ராகுல் மற்றும் ஹார்திக் பாண்டியா உபாதைக்குள்ளாகியிருப்பது அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகின்றது.

இதுவரை அவர்களின் காயம் குணமடையாத காரணத்தால், எதிர்வரும் 8ஆம் திகதி மும்பையில் நடைபெறவுள்ள நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், இவர்கள் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வலைப் பயிற்சியின் போது பந்து இடது கையில் பட்டு உபாதைக்குள்ளாகியுள்ளார் ராகுல். அதேபோல், ஹார்டிக் பாண்டியாவுக்கு வலது தோள்பட்டையில் உபாதை ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களின் ஆலோசனைக்கு அமைய எதிர்வரும் போட்டிகளில் பங்கேற்பது குறித்து இருவரும் தீர்மானிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg