Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாணயத்தாள் விவகாரத்தால் மக்களவையில் அமளி: பிற்பகல் வரை ஒத்திவைப்பு

In இந்தியா
Updated: 10:15 GMT, Nov 28, 2016 | Published: 08:40 GMT, Nov 28, 2016 |
0 Comments
1243
This post was written by : Elakkiya

மத்திய அரசின் நாணயத்தாள் விவகாரம் குறித்து இன்று (திங்கட்கிழமை) எதிர்கட்சிகளினால் பாரிய எதிர்ப்பு வெளியிடப்பட்ட நிலையில் பிற்பகல் வரை மக்களவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இன்றைய மக்களவைக் கூட்டத்தில் திரிணாமூல் காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நாணயத்தாள் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியறுத்தி சர்ச்சையில் ஈடுபட்டனர்.

எனினும் கேள்வி நேரத்துக்குப் பின்னரே இந்த விவகாரம் விவாதிக்கப்படும் என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து அவையில் மையப்பகுதிக்கு வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தியபடி, பிரதமர் மோடிக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கடுமையாக கோஷங்களை எழுப்பினர். காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரி உறுப்பினர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் கோஷங்களை எழுப்பி மக்களவைக் கூட்டத்திற்கு இடையூறு விளைவித்தனர்.

இந்நிலையில் மக்களவை உறுப்பினர்கள் விதியை மீறி அமளியில் ஈடுபடுவதாக எச்சரிக்கை விடுத்த சபாநாயகர் மக்களவையை 12 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

எனினும் 12 மணிக்கு மீண்டும் கூடிய மக்களவையிலும் தொடர்ந்து பிரச்சனை நீடித்ததால் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg