Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லூதியானா நகரில் அடாவடித்தனங்களில் ஈடுபட்ட 11 இளைஞர்கள் கைது

In இந்தியா
Updated: 10:12 GMT, Nov 28, 2016 | Published: 10:12 GMT, Nov 28, 2016 |
0 Comments
1292
This post was written by : Elakkiya

இந்தியாவின் வடக்கு லூதியானா நகர பொலிஸார் நகரில் அடாவடித்தனங்களில் ஈடுபட்ட 11 இளைஞர்களை ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் கைது செய்துள்ளனர்.

நகரின் கலிப் காலன் கிராமத்தில் சந்தேகத்திற்கு உரிய வகையில் ஒரு குழுவினர் நடமாடுவதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களிடமிருந்து பல நாட்டு துப்பாக்கிகள், வெளிநாட்டு பிஸ்டல் ஒன்று மற்றும் பல தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குர்;பிறீத் சிங் என்பவரின் தலைமையில் இயங்கும் குறித்த குழு அந்த நகரில் பெரிய தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இத குறித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ‘ லூதியானா பொலிஸார் பதினொரு பேர்கொண்ட கும்பலை கைது செய்துள்ளனர்.அவர்களிடமிருந்து 12 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குறித்த குழுவினர் நகரில் குழப்பத்தை ஏற்படுத்த திட்டமிட்டிருந்தனர். அவர்கள் குறித்து எமக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டோம்;’ என்று தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட பதினொரு இளைஞர்களும் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டவர்கள் எனவும் குறித்த குழுவைச் சேர்ந்த ஒருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை தேடும் பணிகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg