Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீன் ஏற்றும் குளிரூட்டி வாகனத்தில் தேக்கு மரக் கடத்தல்: ஒருவர் கைது

In இலங்கை
Updated: 04:36 GMT, Nov 29, 2016 | Published: 04:36 GMT, Nov 29, 2016 |
0 Comments
1078
This post was written by : Varshini

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் பிரதேசத்தில், மீன் ஏற்றும் குளிரூட்டி வாகனத்திற்குள் மறைத்து கடத்தப்பட்ட ஒரு தொகை தேக்கு மரங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தமக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து கிரான் சந்தியில் மறைந்திருந்த ஏறாவூர் பொலிஸார், இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை குறித்த மரக்குற்றிகளை கைப்பற்றியுள்ளனர். சுமார் 15 அடி நீளமான 15 பெரிய மரக்குற்றிகள் இவ்வாறு கடத்தப்பட்டுள்ளன.

வாகன சாரதியை கைதுசெய்துள்ள பொலிஸார் வாகனத்தை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்றுள்ளனர். அத்தோடு, வாகன சாரதியை நாளை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

teak-2

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg