Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நியூஸிலாந்துடனான டெஸ்ட்: தொடரின் தோல்வியை தவிர்க்க போராடும் பாகிஸ்தான்

In கிாிக்கட்
Updated: 04:49 GMT, Nov 29, 2016 | Published: 04:48 GMT, Nov 29, 2016 |
0 Comments
1188
This post was written by : Elakkiya

நியூஸிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிவரும் பாகிஸ்தான் அணி 369 ஓட்டங்கள் வெற்றி இலக்கு என்ற நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.

நேற்றைய நான்காம்நாள் ஆட்டநேர நிறைவில் மூன்று ஓவர்கள் முடிவில் ஒரு ஓட்டத்தினை மாத்திரமே பெற்றிருந்த பாகிஸ்தான் தொடர்ந்து இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டத்தில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.

முன்னதாக நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தானின் விருப்புக்கு அமைய முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து தமது முதலாவது இன்னிங்ஸில் 271 ஓட்டங்களை பெற்றது.

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 67 ஓவர் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 216 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதன்படி முதலாவது இன்னிங்ஸ் நிறைவில் 55 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருந்த நியூஸிலாந்து தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்ஸில் 313 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.

இதன்காரணமாக 369 ஓட்டங்கள் பாகிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இவ்விரு அணிகளுக்கு இடையிலும் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்களால் நியூஸிலாந்து வெற்றிபெற்றிருந்த நிலையில், தொடரின் தோல்வியை தவிர்ப்பதற்கு நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg