Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் தாக்குதல்: இரு ராணுவ வீரர்கள் காயம்

In இந்தியா
Published: 06:57 GMT, Nov 29, 2016 |
0 Comments
1247
This post was written by : Anojkiyan

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து 20 கி.மீட்டர் தொலைவில் உள்ள நக்ரோடா அருகே உள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் இரு ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதையடுத்து அந்த இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர், அங்குள்ள பாடசாலைகளை மூடுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதியில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளின் முயற்சியை முறியடித்து ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg