Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மகளிர் ஆசிய கிண்ண ‘ரி-ருவென்ரி’: நேபாளத்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி

In கிாிக்கட்
Updated: 07:26 GMT, Nov 29, 2016 | Published: 07:23 GMT, Nov 29, 2016 |
0 Comments
1320
This post was written by : Elakkiya

மகளிர் ஆசிய கிண்ண ‘ரி-ருவென்ரி’ தொடரின் நேற்றைய போட்டியில் நேபாளம் அணியை 23 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்து இலங்கை அணி சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது.

தாய்லாந்தில் நடைபெற்றுவரும் இந்த தொடரின் நேற்றைய போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதற்கேற்ப முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணி ஆரம்பத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் பின்னர் தொடர்ச்சியாக தனது விக்கெட்களை இழந்தது. இதன்காரணமாக 16.2 ஓவர் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்த நேபாள அணி 23 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. நேபாள அணியின் எட்டு வீராங்கனைகள் ஓட்டம் எதனையும் பெறாது ஆட்டமிழந்தனர்.

நேபாள மகளிர் அணியின் இந்த ஓட்ட எண்ணிக்கை சர்வதேச கிரிக்கட் அரங்கில் மகளிர் அணி ஒன்று பெற்றுக் கொள்ளும் மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகும்.

பந்து வீச்சில் இனோகா ரணவீர, குமாரி ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

தொடந்து 24 என்ற இலகு வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 4.3 ஓவர் நிறைவில் 2 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg