Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆசிய ஹொக்கி சம்மேளனக் கிண்ணத் தொடரில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்

In விளையாட்டு
Updated: 07:59 GMT, Nov 29, 2016 | Published: 07:47 GMT, Nov 29, 2016 |
0 Comments
1184
This post was written by : Elakkiya

ஐந்தாவது ஆசிய ஹொக்கி சம்மேளனக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளது.

ஹொங்கொங் கிங்ஸ்பார்க் மைதானத்தில் நடைபெற்றுவந்த 2016 ஆம் ஆண்டுக்கான ஐந்தாவது ஆசிய ஹொக்கி சம்மேளன கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் பங்களாதேஷை எதிர்கொண்ட இலங்கை 3:0 என்ற கோல் அடிப்படையில் தோல்வியடைந்தது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சம்பியன்பட்டம் வென்ற பங்களாதேஷ் அணி முதல்பாதி ஆட்டத்தில் முதல் கோலையும் இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரண்டு கோல்களையும் பெற்று 3:0 என்ற கோல்கள் அடிப்படையில் இலங்கையை வெற்றிகொண்டது.

இறுதிவரை போராடிய  இலங்கை அணியால் கோல்கள் எதனையும் பெற முடியவில்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg