Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பணவிநியோகம் குறித்து அதிருப்தி: ஆத்திரமடைந்த மக்கள் போராட்டத்தில்

In இந்தியா
Updated: 09:48 GMT, Nov 29, 2016 | Published: 09:48 GMT, Nov 29, 2016 |
0 Comments
1152
This post was written by : Sambavi

பண விநியோகம் இன்னும் சீரடையாததால் பொறுமை இழந்த மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பழைய 500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு 20 நாட்களுக்கு மேலாகியும் இன்னமும் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை என்பதனால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

2 நாள் விடுமுறைக்கு பின் பணம் எடுப்பதற்காக வண்ணாரப்பேட்டையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிமுன்பு மக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். 8 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த மக்களுக்கு, கணக்கில் வைப்பு மட்டுமே செய்ய முடியும், பணம் எடுக்க முடியாது என்று கூறியதால் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

இதனால் மக்களுக்கும், வங்கி அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பணம் வழங்காததை கண்டித்து அவர்கள் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதேவேளை, எடிப்பாடியைடுத்த கோனேரிபட்டியில் வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், வங்கிகளில் நிலவும் பணத்தட்டுப்பாட்டை கண்டித்து சேலத்தில் வங்கியை முற்றுகையிட முயன்ற மனிதநேய மக்கள் கட்சியினரை பொலிஸார் கைது செய்தனர்.

இதேவேளை, ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய தமிழகம் கட்சியினர் வங்கி முன்பு திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பழைய 500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி நெல்லை ரயில்நிலையம் முன்பு இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg