Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முட்டை மசாலா

In
Updated: 10:20 GMT, Nov 29, 2016 | Published: 10:19 GMT, Nov 29, 2016 |
0 Comments
2069
This post was written by : Shailu
egg-masala

தேவையான பொருட்கள்

முட்டை – 5
வெங்காயம் – 1
தக்காளி – 2
இஞ்சி பூண்டு விழுது -1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி
இலை – சிறிதளவு
வெங்காயத்தாள் – சிறிதளவு
பெருஞ்சீரகம் – 1 ஸ்பூன்
கடுகு – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 ஸ்பூன்

செய்முறை

முட்டையை வேகவைத்து பாதியாக வெட்டி வைக்கவும். தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தாள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருஞ்சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் போட்டு வதக்கவும்.

வெங்காயம் சிறிது வதங்கிய பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். அடுத்து அதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.

தக்காளி சிறிது வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் போது முட்டையை போட்டு உடையாமல் கிளறி கொத்தமல்லி தழை, வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.தற்போது சுவையான முட்டை மசாலா ரெடி.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg