Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் தொழிநுட்ப பீடம் ஆரம்பம்

In
Updated: 17:47 GMT, Nov 29, 2016 | Published: 17:44 GMT, Nov 29, 2016 |
0 Comments
1378
This post was written by : hoshika

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிதாக தொழிநுட்ப பீடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என, பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம். நாஜிம் தெரிவித்தார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிதாக ஆரம்பித்துள்ள தொழிநுட்ப பீடம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு, இன்று (செவ்வாய்கிழமை) பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசும் போதே, மேற்கண்ட விடயங்களை அவர் தெரிவித்தார்.

தொழிநுட்ப பீடத்துக்கா 620 மில்லியன் ரூபாய் நிதியினை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. இதில் புதிய கட்டிட நிர்மாணத்துக்காக 450 மில்லியன் ரூபாய் கிடைத்துள்ளது. மேலும், புதிய பீட மாணவர் விடுதிக்கான விடுதியும் நிர்மாணிக்கப்படவுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

மாணவர்கள் தொழிநுட்ப பீடத்துக்கு தெரிவாகுவதற்காக – உயர் தரத்தில் கணித, விஞ்ஞான துறையில் தான் கற்க வேண்டும் என்ற நிலை இல்லை. மாணவர்கள் கலைத் துறையின் ஊடாக தொழிநுட்பத்துறைக்கு வரமுடியும் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு தொழிற் துறையில் முன்னேறக்கூடிய ஒரு சந்தர்ப்பமாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.

south-eastern-campus-01 south-eastern-campus-02 south-eastern-campus-03

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg