Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெரும்பான்மையின தலைவர்களும் மாற்றத்தை விரும்புகின்றனர்: சம்பந்தன்

In இலங்கை
Updated: 03:34 GMT, Nov 30, 2016 | Published: 03:34 GMT, Nov 30, 2016 |
0 Comments
1207
This post was written by : Varshini

புதிய அரசியலமைப்பு மாற்றமானது தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி சகல இன மக்களுக்கும் தேவையானது என்பதையும் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டிருப்பதையும் பெரும்பான்மையின தலைவர்கள் மத்தியில் காணக்கூடியதாக உள்ளதென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் திருகோணமலையில் நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மஹிந்த அரசாங்கத்தில் பல கோரிக்கைகளை முன்வைத்திருந்த போதும், பேச்சுவார்தைக்கு வருவதற்கும் அவர்கள் மறுத்துவந்தனர் என தெரிவித்த சம்பந்தன், நல்லாட்சியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதென்றும் இந்த சந்தர்ப்பத்தை தவறவிடக் கூடாதென்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, புதிய அரசியலமைப்பு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நடவடிக்கைக் குழு இதுவரை 45 தடவைகள் கூடி பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்துள்ளதாகவும், இன்னும் முடிவுகள் எடுக்கப்படவில்லையெனவும் சம்பந்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பான பேச்சுக்களும் இடம்பெற்று வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg