Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

செல்லாத தாள்களின் வைப்புக் காலத்தை அதிகரிக்கும் திட்டமில்லை: மத்திய அரசு

In இந்தியா
Updated: 04:27 GMT, Nov 30, 2016 | Published: 04:27 GMT, Nov 30, 2016 |
0 Comments
1190
This post was written by : Varothayan

இந்தியாவில் செல்லாததாக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களை வங்கிக் கணக்குகளில் செலுத்துவதற்கான காலக்கெடுவை டிசம்பர் 30 ஆம் திகதியில் இருந்து நீட்டிக்கும் திட்டமில்லை என்று இந்திய மத்திய அரசு நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது.

இதுகுறித்த கேள்வியொன்றுக்கு நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மாநிலங்களைவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, மத்திய ரிசர்வ் வங்கியிடமும், அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளிடமும் தேவையான அளவு ரொக்கம் கையிருப்பு உள்ளது.

ஏற்கெனவே புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 ரூபாய் தாள்களை வங்கிக் கணக்குகளில் செலுத்துவதற்கான கடைசி திகதி டிசம்பர் 30 என்று விதிக்கப்பட்டிருந்த காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கவில்லை. 100 ரூபாய் தாள்களின் புழக்கம் கணிசமாக அதிகரித்துள்ளது.

கிராமங்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அந்தப் பகுதிகளில் 100 மற்றும் அதற்குக் குறைவான மதிப்புள்ள ரூபாய் தாள்களை அதிக அளவு விநியோகிக்குமாறு வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது- என்றுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg