Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காஷ்மீரில் இராணுவ முகாம் மீது தாக்குதல்: 7 வீரர்கள் உயிரிழப்பு

In இந்தியா
Updated: 04:46 GMT, Nov 30, 2016 | Published: 04:46 GMT, Nov 30, 2016 |
0 Comments
1325
This post was written by : Varothayan

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் நக்ரோட்டாவில் உள்ள இராணுவ முகாமுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) பொலிஸ் சீருடையில் வந்த தீவிரவாதிகள், நடத்திய தாக்குதலில் 2 இராணுவ அதிகாரிகள் உட்பட 7 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து பாதுகாப்புத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ஜம்முவின் புறநகர்ப் பகுதியில் நக்ரோட்டா என்ற இடத்தில் உள்ள இராணுவ முகாமிற்கு பொலிஸாரின் சீருடையில் வந்த 4 முதல் 5 தீவிரவாதிகள் பீரங்கிப் படைப் பிரிவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.

அதில் இராணுவ அதிகாரி ஒருவரும், 3 வீரர்களும் உயிரிழந்தனர். மேலும் சில வீரர்கள் காயமடைந்தனர். தாக்குதலைத் தொடர்ந்து 12 வீரர்கள், 2 பெண்கள், 2 குழந்தைகள் என மொத்தம் 16 பேரை, பணயக் கைதிகளாக தீவிரவாதிகள் பிடித்து வைத்துக் கொண்டனர்.

அவர்களை பத்திரமாக மீட்கப்பதற்கு இராணுவ வீரர்கள் போராடிய போது ஒரு அதிகாரியும், 2 வீரர்களும் கொல்லப்பட்டனர். எனினும் தீவிரவாதிகளை சுட்டுக் கொன்று அவர்கள் பிடித்து வைத்திருந்த 16 பேரையும் இராணுவம் பத்திரமாக மீட்டது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நக்ரோட்டா வட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg