Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய அணிக்கெதிரான டெஸ்ட்: இங்கிலாந்தின் இளம் வீரர் விலகல்

In கிாிக்கட்
Published: 05:13 GMT, Nov 30, 2016 |
0 Comments
1158
This post was written by : Anojkiyan
hameed

கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியுடனான எஞ்சிய இரு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து அணியின் 19 வயதான இளம் தொடக்க வீரர் ஹசீப் ஹமீத் அறிவித்துள்ளார்.

மொஹாலியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்டில், இடது கை சுண்டு விரலில் பந்து பட்டு உபாதைக்குள்ளான ஹசீப் ஹமீத்தின் காயத்தின் தன்மை, வீரியம் உள்ளதாக இருப்பதால் இங்கிலாந்து அணி அவரை சிகிச்சைக்காக உடனடியாக இங்கிலாந்து அனுப்புகிறது.

இதனால் இந்தியாவிற்கு எதிராக மும்பை மற்றும் சென்னையில் நடக்க இருக்கம் எஞ்சிய இரண்டு போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இங்கிலாந்து அணி புதிய தொடக்க வீரரரை அறிவிக்கவில்லை. இது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg