Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தொடர்கிறது பிள்ளையான் உள்ளிட்ட நால்வரின் சிறைவாசம்

In இலங்கை
Updated: 05:09 GMT, Nov 30, 2016 | Published: 05:08 GMT, Nov 30, 2016 |
0 Comments
1271
This post was written by : Varshini

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட நால்வரது விளக்கமறியல், எதிர்வரும் டிசம்பர் மாதம் 14ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் நால்வரும் இன்று (புதன்கிழமை) நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவ புலனாய்வு உத்தியோகத்தரான எம்.கலீல் ஆகியோருக்கே விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கடந்த 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். சம்பவம் தொடர்பாக கடந்த 2015ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி பிள்ளையான் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg