Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.எஸ்.எல்.: கொல்கத்தா-கேரளா அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் நிறைவு

In உதைப்பந்தாட்டம்
Updated: 07:42 GMT, Nov 30, 2016 | Published: 07:04 GMT, Nov 30, 2016 |
0 Comments
1165
This post was written by : Anojkiyan

3வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின் நேற்று (செவ்வாய்கிழமை) அரங்கேறிய அட்லெடிகோ டீ கொல்கத்தா மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணிகளுக்கு இடையேயான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்துள்ளது.

51வது லீக் போட்டியாக இடம்பெற்ற இப்போட்டியில், வெற்றி பெறும் அணி அரை இறுதிக்கு தகுதி பெறும் என்ற நிலையில் இரு அணிகளும் களமிறங்கியது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின், 6வது நிமிடத்தில் கேரளா அணி முதல் கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தது. இந்த கோலை வினீத் அடித்தார்.

இதைதொடர்ந்து கோல் போட முனைப்பு காட்டிய கொல்கத்தா அணிக்கு 18வது நிமிடத்தில் கோல் போடும் வாய்ப்பு கிடைத்தது. பியர்சன் இந்த கோலை வலைக்குள் புகுத்தி கோல் கணக்கை சமநிலை படுத்தினார்.

அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. முடிவில் இந்த போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

இரு அணிகளும் 19 புள்ளிகளுடன் அரை இறுதி வாய்ப்பில் நீடிக்கின்றன. இன்று மோதும் நொர்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி) மற்றும் டெல்லி டைனமோஸ் எப்.சி. அணிகளுக்கிடையிலான போட்டியில், கவுகாத்தி அணி தோற்றால் கொல்கத்தா, கேரளா அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்று விடும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg