Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஃபிடெல் காஸ்ரோவிற்கு அஞ்சலி: உலக தலைவர்கள் பங்கேற்ற பேரணியில் ஒபாமா இல்லை

In உலகம்
Updated: 06:41 GMT, Nov 30, 2016 | Published: 06:41 GMT, Nov 30, 2016 |
0 Comments
1235
This post was written by : Risha

மறைந்த கியூபாவின் புரட்சியாளரும், முன்னாள் ஜனாதிபதியும், கியூபாவின் நீண்ட கால ஆட்சியாளர் என்ற கௌரவத்தை தன்னகத்தே கொண்டவருமான ஃபிடெல் காஸ்ரோவை நினைவுகூரும் வகையிலான மாபெரும் பேரணியொன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) கியூப தலைநகர் ஹவானாவில் இடம்பெற்றது.

உலக தலைவர்கள் பலரும் கலந்துக் கொண்டிருந்த குறித்த பேரணியில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கலந்துக் கொள்ளாத அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலும் எவரும் கலந்துக் கொள்ளமாட்டார்கள் என வெள்ளை மாளிகை அறிவித்திருந்தது.

ஹவானாவில் அமைந்துள்ள புரட்சி சதுக்கத்தில் கூடிய பல்லாயிரக்கண மக்கள், ஃபிடெல் காஸ்ரோ மற்றும் ஏனைய புரட்சிகர தலைவர்களின் போராட்டங்களை பிரதிபலிக்கும் பழைய படங்களை ஏந்தியவாறும், கியூபாவின் தேசிய கீதத்தை இசைத்த வண்ணமும் பேரணியில் கலந்துக் கொண்டிருந்தனர்.

குறித்த பேரணியில் மெக்ஸிகோ, ஈக்குவடோர், பொலிவியா, வெனிசுலா, பனாமா, தென்னாபிரிக்கா மற்றும் சிம்பாப்பே ஆகிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிராந்திய தலைவர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தனர்.

அங்கு உரையாற்றிய பொலிவிய ஜனாதிபதி, ஃபிடெல் காஸ்ரோவின் மறைவானது தனிப்பட்ட முறையில் தனக்கு பேரிழப்பாகும் என குறிப்பிட்டார். மேலும், அவரது மனித நேய செயற்பாடுகளுக்காக அவருக்கு மரியாதை செலுத்தி தலைவணங்குவதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஃபிடெல் காஸ்ரோவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாக தெரிவித்த மெக்ஸிகோ ஜனாதிபதி, இதுவரை செயற்பட்டது போன்று எதிர்வரும் காலத்திலும் கியூப மக்களுடன் நட்புடன் செயற்பட தாம் தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றி தென்னாபிரிக்க ஜனாதிபதி, எமது காலத்தின் மிகச் சிறந்த புரட்சியாளரையும், 20ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய வீரனையும் நாம் இழந்துள்ளோம். இவரது இழப்பின் துயரால் தென்னாபிரிக்க அரசும், மக்களும் வாடி நிற்கின்றனர் என்று குறிப்பிட்டார்.

ஃபிடெல் காஸ்ரோவின் ஆட்சிக்காலத்தில் கியூபாவில் நிலவிய சர்ச்சைக்குரிய அரசியல் மற்றும் மனித உரிமை செயல்பாடுகள் காரணமாக அவரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த, பல மேற்கத்தேய நாடுகளும் தங்களின் கீழ் நிலை அதிகாரிகளையே கியூபாவுக்கு அனுப்பியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தனது 90ஆவது வயதில் உயிரிழந்த ஃபிடெல் காஸ்ரோவின் இறுதி சடங்குகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg