Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மந்திரவாதியின் பிடியில் நடிகை பாபிலோனா

In சினிமா
Updated: 06:57 GMT, Nov 30, 2016 | Published: 06:57 GMT, Nov 30, 2016 |
0 Comments
1308
This post was written by : Varothayan

மந்திரவாதியின் பிடியில் கவர்ச்சி நடிகை பாபிலோனா சிக்கியிருப்பதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதால் மீட்க வேண்டும் என்றும் சென்னை பொலிஸ் ஆணையாளர் அலுவலகத்தில், மனு கொடுக்கப்பட்டுள்ளது.

பாபிலோனாவின் பாட்டி கிருஷ்ணகுமாரி சென்னை இந்த மனுவைக் கொடுத்துள்ளார். அதில், பாபிலோனாவை நான் தான் வளர்த்தேன். அவரை திரை உலகத்தில் அறிமுகப்படுத்தி பிரபல நடிகையாக வளர்த்துவிட்டதும் நான் தான்.

எனது பேத்தி பாபிலோனா தற்போது மந்திரவாதி ஒருவரின் பிடியில் சிக்கியுள்ளார். வசியக்கலை மூலம் எனது பேத்தியை வசியப்படுத்தி, அந்த மந்திரவாதி தனது பிடியில் வைத்துள்ளார். எனது பேத்தியின் நகைகள் மற்றும் பணம் அனைத்தையும் அவர் அபகரித்து விட்டார்.

அந்த மந்திரவாதி திருமணமானவர். அவரால் எனது பேத்தியின் உயிருக்கு ஆபத்து உள்ளது. இதுபற்றி நான் நேரிடையாக சென்று மந்திரவாதியிடம் பேசினேன். எனது பேத்தியை விட்டுவிடுமாறு கெஞ்சினேன். ஆனால் அந்த மந்திரவாதி எனக்கு கொலை மிரட்டல் விடுத்து தவறாக பேசினார்.

பாபிலோனாவை சிறைவைத்துள்ள மந்திரவாதி பல்வேறு குற்றவழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்று தெரிகிறது. எனவே பாபிலோனாவை குறிப்பிட்ட மந்திரவாதியிடம் இருந்து பத்திரமாக மீட்கவேண்டும். மந்திரவாதி மீது சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்க வேண்டும்- என்று கூறப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg