Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை அணிக்கு அடுத்த மாதம் மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது: பயிற்சியாளர் எச்சரிக்கை

In கிாிக்கட்
Updated: 08:07 GMT, Nov 30, 2016 | Published: 08:07 GMT, Nov 30, 2016 |
0 Comments
2484
This post was written by : Anojkiyan

தென்னாபிரிக்கா செல்லும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு மிகப் பெரிய சவால் காத்திருப்பதாக இலங்கை அணியின் பயிற்சியாளர் கிரகாம் போர்ட் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டிகள், 3 டெஸ்ட் போட்டிகள், 3 ரி-ருவென்ரி போட்டிகளில் விளையாடவுள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26ஆம் திகதி போர்ட் எளிசபத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில், இத்தொடர் குறித்து அணியின் பயிற்சியாளர் கிரகாம் போர்ட் கூறுகையில், இலங்கை அணியின் வெற்றி சிறப்பானது. அனுபவம் வாய்ந்த வீரர்கள் மெத்யூஸ், சந்திமால் இல்லாமல் இலங்கை அணி வீரர்கள் தங்கள் திறமையை திறம்பட வெளிப்படுத்தினர். தற்போது வெற்றிக்களிப்பில் இருக்கும் இலங்கை அணிக்கு வரும் டிசம்பர் மாதம் மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது.

இலங்கை அணி, அவுஸ்திரேலியா அணியுடன் வெற்றி பெற்றது சொந்த மண்ணில். தென்னாபிரிக்கா தொடர் முற்றிலும் வேறுபட்டது. அதற்கு ஆயத்தமாக இலங்கை வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

இருப்பினும் அவுஸ்திரேலியா மற்றும் சிம்பாப்வே தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளதால், அது அவர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை அளிக்கும். மேலும் தென்னாபிரிக்கா தொடருக்கு மெத்யூஸ், சந்திமால் உடல் தகுதி பெற்றுவிட்டனர். அவர்கள் விரைவில் அணியுடன் இணைவார்கள் என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg