Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விபத்திற்குள்ளான விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டுபிடிப்பு: விசாரணைகள் தீவிரம்

In உலகம்
Updated: 07:53 GMT, Nov 30, 2016 | Published: 07:53 GMT, Nov 30, 2016 |
0 Comments
1586
This post was written by : Risha

பொலிவியாவில் இருந்து கொலம்பியாவிற்கு பயணித்த நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) விபத்திற்கு உள்ளான விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொலம்பிய உள்நாட்டு விமான போக்குவரத்து  அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், கறுப்பு பெட்டியில் பதிவாகியுள்ள தரவுகளின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், விபத்து நேர்ந்த பகுதியில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த விபத்திற்கான உரிய காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து நேர்ந்ததாக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளதாக உள்ளூர் செய்திகள் வெளியாகிவருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, விமானத்தின் சுற்றமைப்பில் ஏற்பட்ட செயலிழப்பே விபத்திற்கு காரணம் என கொலம்பிய மற்றும் பொலிவிய சிவில் விமான போக்குவரத்து அதிகரிகள் குறிப்பிட்டுள்ளதாக கொலம்பிய சிவில் விமான போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்தவர்கள் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வரும் அதேவேளை, அவர்கள் ஏதேனும் கிருமி தொற்றுக்கு உள்ளாகி உள்ளனரா என்ற ரீதியில் கூடுதல் அவதானத்திற்கு உட்படுத்தப்பட்டு வருவதாக சான் ஜுவான் டி டியோஸ் வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

நேற்று இடம்பெற்ற மேற்படி விபத்தில் பிரேசிலின் உள்ளூர் கால்பந்து அணியான Chapecoense இன் வீரர்கள் உள்ளிட்ட 76 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg