Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அநாகரீக செயற்பாட்டால் பதவியை இழந்த கனடிய இராணுவ அதிகாரி

In கனடா
Updated: 11:46 GMT, Nov 30, 2016 | Published: 11:45 GMT, Nov 30, 2016 |
0 Comments
1070
This post was written by : Risha

சக பெண் அதிகாரியிடம் அநாகரீகமான முறையில் செயற்பட்ட குற்றச்சாட்டில் கனடிய நாட்டை சேர்ந்த இராணுவ அதிகாரியின் பதவி பறிக்கப்பட்டு, அந்நாட்டு நீதிமன்றத்தினால் கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கனடிய இராணுவத்தில் மாஸ்டர் வாரண்ட் அதிகாரியாக பணியாற்றி வந்த கியூபெக் மாகாணத்தை சேர்ந்த ஆலன் சாப்மேன், கடந்த 2010ஆம் ஆண்டு சைப்ரஸ் நாட்டிற்கு இராணுவப்பணிக்காக சென்றார்.

அதன்போது, அவருடன் பணியாற்றிய சக பெண் இராணுவ அதிகாரியுடன் அவர் அநாகரீகமாக நடந்துக்கொண்டதாக முறைப்பாடு கூறப்பட்டது. இதன்போது, இவ்வழக்கின் இறுதி விசாரணை நேற்று (செவ்வாய்க்கிழமை) நீதிமன்றத்திற்கு வந்தபோது இராணுவ வீரரின் செயலை நீதிபதி கடுமையாக கண்டித்துள்ளார்.

அத்துடன், அவருடைய மாஸ்டர் வாரண்ட் அதிகாரி என்ற பதவியை இழந்து வாரண்ட் அதிகாரி என தகுதியிறக்கம் செய்வதாக உத்தரவிட்டுள்ளார். மேலும், ஆலன் சாப்மேன் மீதான 2 ஆயிரத்து 500 டொலர் அபராதம் விதிப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg