Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒலிபரப்பாளர் பொன்மணி குலசிங்கம் காலமானார்

In
Updated: 16:35 GMT, Nov 30, 2016 | Published: 16:35 GMT, Nov 30, 2016 |
0 Comments
1649
This post was written by : Risha

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவையின் முன்னாள் இயக்குனர் பொன்மணி குலசிங்கம் காலமானார். நான்கு பிள்ளைகளின் தாயான அவர் தனது 88 ஆவது வயதில் காலமானார்.

1956 ஆம் ஆண்டு சிறுவர் மற்றும் மகளிர் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக வானொலியில் இணைந்து, படிப்படியாக உயர்ந்த இவர், இசைக் கட்டுப்பாட்டாளராகவும் மேலதிக இயக்குனராகவும் இயக்குனராகவும் கடமையாற்றியுள்ளார்.

அத்துடன் இவர் புகழ்பெற்ற இசையமைப்பாளர் முத்துசாமி தலைமையில் இயக்கிய இலங்கைப் பாடகர்களின் ”ஈழத்துப் பாடல்கள்” நிகழ்ச்சி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பெரும் வவேற்பை பெற்றிருந்தது.

அதேவேளை கண்டி மற்றும் யாழ் ஒலிபரப்புகளும் இவரது காலத்திலேயே அறிமுகம் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg