Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ் குடாநாட்டில் சூறாவளிக்கு வாய்ப்புள்ளதாம்!

In இலங்கை
Updated: 18:37 GMT, Nov 30, 2016 | Published: 18:37 GMT, Nov 30, 2016 |
0 Comments
1681
This post was written by : hoshika

திருகோணமலை கடற்பரப்பில் மையம்கொண்டுள்ள தாழமுக்கம் யாழ் குடாநாட்டினூடாக நகரும் என்றும் அது சூறாவளியாக மறுவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகவும் வானிலை அவதான மையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மையத்தினால் இன்று (புதன்கிழமை) மாலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது

திருகோணமலையிலிருந்து 400 கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் யாழ் குடாநாட்டின் வடமேற்காக நகரும் அதே வேளை அடுத்து வரும் 12 மணித்தியாலங்களில் இத்தாழமுக்கமானது சூறாவளியாக மாறக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

முதலாம் திகதி நள்ளிரவு இத்தாழமுக்கமானது தமிழ் நாட்டின் வடபகுதியூடாக நகருமெனவும் 2ஆம் திகதி வரை காற்றுடன் கூடிய மழை காணப்படுமெனவும் வானிலை அவதான நிலையத்தினால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதென யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg