Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

தலை மாற்றுச் சத்திர சிகிச்சையும் சாத்தியமாகிறது.

In
Updated: 17:57 GMT, Dec 13, 2016 | Published: 17:53 GMT, Dec 13, 2016 |
0 Comments
1131
hqdefault

மனித அவயங்களை மாற்றுச் செய்யும் சத்திர சிகிச்சைகள் மருத்துவ அறிவியல் வளர்ச்சியில் மேம்பட்டு வருகிறது. இருதய மாற்று அறுவை சிகிச்சை இயல்பான ஒன்றாக தற்போது மாறியுள்ளது. இன் நிலையில் மனிதர்களுக்கு தலை மாற்று அறுவை சிகிச்சை சாத்தியமாகும் என 2015 இல் தெரியப்படுத்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியவர் இத்தாலிய நரம்பியல் நிபுணரான சேர்ஜியோ கனவெரோ.

இத்துறை சார்ந்து தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வந்த சேர்ஜியோ கனவெரோ தனது ஆய்வின் மைல்கல்லை இப்போது தான் எட்டியிருப்பதாக தெரிவித்துள்ளார். தனது இலட்சியமான  தலைமாற்று சத்திரசிகிச்சை அடுத்த ஆண்டு சாத்தியமாகலாம் என அவர் கூறியுள்ளார்.

தலைக்கு கீழே செயலற்றுப் போன பக்கவாத நோயாளிகளுக்கான மறுவாழ்வை இத்தகைய சத்திர சிகிச்சை மீட்டுத்தரலாம் என நம்பப்படுகிறது. குறித்த தலைமாற்றுச் சத்திர சிகிச்சையானது நாய்கள் குரங்குகள் எலிகளில் ஓரளவு வெற்றியுடன் மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்படலாம் என தெரிவிக்கப்படும் தலை மாற்று சத்திர சிகிச்சைக்கான முதல் நோயாளியாக வர தான் தயார் என ரஷ்யாவைச் சேர்ந்த வெலறி ஸ்பிரிடொனோவ் என்பவர் தெரிவித்துள்ளார். இவர் உலகில் அரிதாகக் காணப்படும் மரபணு குறைபாடுள்ள தசை வளர்ச்சிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர் ஆவார்.