Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரண்டாவது முறையாக கிண்ணத்தை கைப்பற்றியது கொல்கத்தா!

In உதைப்பந்தாட்டம்
Updated: 04:08 GMT, Dec 19, 2016 | Published: 04:08 GMT, Dec 19, 2016 |
0 Comments
1217
This post was written by : Sambavi

எதிர்பார்ப்பு மிக்க இந்தியன் சுப்பர் லீக் கால்பந்துத் தொடரின் இறுதிப் போட்டியை வென்று கிண்ணத்தை இரண்டாவது முறையாக கைப்பற்றியது கொல்கத்தா அணி.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இறுதிப் போட்டியில் பெனால்டி சூட்டில் 4:3 என்ற கோல் கணக்கில் கேரளாவை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி கொச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் கொல்கத்தா – கேரளா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் அரையிறுதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன.

இதனையடுத்து இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரமாக முயற்சி செய்தன. இருப்பினும் அரண்களாக நின்ற எதிர் அணியின் வீரர்களை சமாளித்து கோல் அடிக்க இரு அணிகளாலும் முடியவில்லை. இதனால் இரண்டு முறை தலா 15 நிமிடங்கள் கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது.

இருந்த போதிலும், கூடுதல் நேரத்திலும் இரு அணியும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனையடுத்து பெனால்டி சூட் வாய்ப்பு அளிக்கப்பட்டது. பெனால்டி சூட்டில் கேரளா அணி 3 கோல்களும், கொல்கத்தா அணி 4 கோல்களும் அடித்தன.

இதன் மூலம் பெனால்டி சூட்டில் 4:3 என்ற கோல் கணக்கில் கேரளாவை வீழ்த்தி கொல்கத்தா அணி சாம்பியன் ஆனது. கடந்த மூன்று வருடங்களில் கொல்கத்தா அணி இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg