Chrome Badge

இளைஞர் நாடாளுமன்ற தேர்தலில் கிழக்கு மாகாணத்திலிருந்து பத்து பேர் தெரிவு

In
Updated: 07:41 GMT, Dec 20, 2016 | Published: 05:56 GMT, Dec 20, 2016 |
0 Comments
1246
ballot-box

நாடளாவிய ரீதியில் நடைபெற்ற இளைஞர் நாடாளுமன்ற தேர்தலில் கிழக்கு மாகாணத்திலிருந்து 10 பேர் வெற்றிபெற்றுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து மூவரும், அம்பாறை மாவட்டத்திலிருந்து நான்கு பேரும் திருகோணமலை மாவட்டத்திலிருந்து மூன்று பேரும் வெற்றிபெற்றுள்ளனர்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த தேர்தலில் அம்பாறை மாவட்டத்திலிருந்து பொத்துவில் தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட காரைதீவைச் சேர்ந்த லோகராஜ் சுலக்சன் 1,256 வாக்குகளையும் கல்முனைத் தொகுதியில் போட்டியிட்ட சாய்ந்தமருதைச் சேர்ந்த எப்.எம்.டில்சாத் 743 வாக்குகளையும் சம்மாந்துறைத் தொகுதியில் போட்டியிட்ட அக்கரைப்பற்றைச் ஏ.கே.நிப்ராஸ் 742 வாக்குகளையும் அம்பாறைத் தொகுதியில் போட்டியிட்ட உகணவைச் சேர்ந்த திலால் துவிந்தவும் வெற்றிபெற்றனர்.

அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கல்குடாத் தொகுதியில் போட்டியிட்ட கரடியனாற்றைச் சேர்ந்த மனோகரன் சுரேஸ்காந்தன் 3,264 வாக்குகளையும் மட்டக்களப்புத் தொகுதியில் போட்டியிட்ட வவுணதீவைச் சேர்ந்த அருள்நாயகம் தக்ஸிக்கா 1,862 வாக்குகளையும் பட்டிருப்புத் தொகுதியில் போட்டியிட்ட, மகிழுர்முனையைச் சேர்ந்த குணரெட்னம் துசாந்தன் 1,223 வாக்குகளையும் பெற்று தெரிவு செய்யப்பட்டனர்.

திருகோணமலை மாவட்டத்திலிருந்து பதவிசிறிபுரவைச் சேர்ந்த அகில பிரபாத் வீரசூரிய 655 வாக்குகளையும் மூதூர் தொகுதியில் போட்டியிட்ட மூதூரைச் சேர்ந்த அப்துல் காதர் நபிகான் 533 வாக்குகளையும் திருகோணமலைத் தொகுதியில் போட்டியிட்ட திருகோணமலை நகரைச் சேர்ந்த ஐயமுத்து டிலுக்ஷன் 280 வாக்குகளையும் பெற்று; தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)