Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

காணாமல் போன இளைஞன் நீருக்குள் இருந்து சடலமாக மீட்பு: ஸ்கொட்லாந்தில் சம்பவம்

In
Updated: 09:10 GMT, Dec 24, 2016 | Published: 09:09 GMT, Dec 24, 2016 |
0 Comments
1046
_93106529_alasdairmcvicar

ஸ்கொட்லாந்தில் கடந்த புதன்கிழமை தொடக்கம் காணாமல் போனதாக கூறப்பட்டு, தேடப்பட்டு வந்த இளைஞன் Argyll பகுதியில் வைத்து பொலிஸாரால் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

கடலோக் காவற்படை மற்றும் உள்ளூர் மலையேறிகள் இணைந்து குறித்த இளைஞனை தேடிவந்த நிலையில், லோச்சன் என்ற பகுதியில் நீருக்குள் இருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் தகவலுக்கு அமைய Alasdair McVicar  என்ற 19 வயதான இளைஞனே அவ்வாறு உயிரிழந்திருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் சடலத்தை பார்த்து உறுதி செய்துள்ளதாகவும் அறியப்படுகின்றது.

கடந்த இரண்டு நாட்களாக குறித்த இளைஞனை தேடுவதற்கு உதவி செய்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள பொலிஸ் அதிகாரிகள் எவ்வாறான போதும் தமது விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)