Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

ஸ்கொட்லாந்தை கோனோர் புயல் தாக்கும் அபாயம்

In
Updated: 10:03 GMT, Dec 26, 2016 | Published: 10:02 GMT, Dec 26, 2016 |
0 Comments
1120
This post was written by : hoshika
17

ஸ்கொட்லாந்தில் காற்றுடன் கூடிய பனிப்பொழிவு தொடர்வதால், பயணத்தை மேற்கொள்வோர் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கோனோர் புயல் காரணமாக ஸ்கொட்லாந்தின் ஓர்க்னீ, ஷெட்லாந்து மற்றும் வடக்கு உயர் பிரதேசங்களில் 90 மையிலுக்கும் மேற்பட்ட வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை Grampian மற்றும் Strathclyde ஆகிய பகுதிகளிலும் பனிப்பொழிவுடன் கூடிய பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சீரற்ற காலநிலை நிலவுவதன் காரணமாக மக்கள் தமது பயணங்கள் தொடர்பில் மீளாய்வு செய்ய வேண்டும் எனவும், அவசியம் ஏற்படின் காலநிலை நிலைமைகளை தெரிந்து கொண்டு அதன் படி பயணத்தை மேற்கொள்ளுமாறும், பிராந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை Tayside, Caithness and Sutherland, Orkney, Scottish Borders, Shetland, Skye, Easter Ross, Great Glen and Lochaber, Tayside, Caithness, Sutherland. Western Isles ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.