Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

இடம்பெயர்ந்திருந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட நைஜீரியர்கள் தாயகம் திரும்பினர்

In
Published: 07:20 GMT, Dec 28, 2016 |
0 Comments
1141
9

பொக்கோ ஹராம் தீவிரவாதிகளின் நாசகார செயல்களினால் வடகிழக்கு நைஜீரியாவில் இருந்து இடம்பெயர்ந்திருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள், தற்போது சொந்த இடங்களுக்குத் திரும்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பிராந்தியத்திற்கான முக்கிய வீதிகள் மீண்டும் திறக்கப்பட்டமையை அடுத்தே, குறித்த மக்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கருத்து வெளியிட்ட நைஜீரிய இராணுவ பேச்சாளர் சுனி உஸ்மான், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டமாசக் நகரவாசிகள் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) திரும்பியுள்ளதாகவும், இவர்கள் அண்டை நாடான நைகர் மற்றும் நாட்டின் Maiduguri நகரம் ஆகியவற்றில் அகதிகளாக தஞ்சமடைந்திருந்தவர்கள் எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை வடகிழக்கு நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் அமைந்துள்ள டமாசக் நகரம், கடந்த 2014ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பொக்கோ ஹராம் தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.