Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிட்னி கடற்கரைப் பகுதியில் தடைசெய்யப்படவுள்ள மதுபான பாவனை

In
Published: 10:59 GMT, Dec 28, 2016 |
0 Comments
1342
This post was written by : hoshika
17-1

அவுஸ்திரேலியாவின் பிரபலமான சிட்னி கடற்கரைப் பகுதியில் கோடை காலம் முழுவதும், மதுபான பாவனை தடை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின் போது மாத்திரம் சிட்னி கடற்கரைப் பகுதியில் சுமார் 15 தொன்னுக்கும் மேற்பட்ட குப்பைகூழங்கள் குவிந்தமையை அடுத்தே, இந்த தடை விதிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கிறிஸ்மஸ் நாளில் மாத்திரம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குறித்த கடற்கரைப் பகுதிக்கு வந்திருந்ததோடு, பெருந்திரளான போத்தல்கள், சிகரெட் பக்கற்றுக்கள் மற்றும் ஏனைய கழிவுப் பொருட்களை விட்டுச் சென்றனர்.

இந்நடவடிக்கையை ‘இழிவான செயல்’ என வர்ணித்துள்ள ரன்விக் (Randwick) நகரபை, இதன் காரணமாக குறித்த பகுதியில் மதுபான பாவனையை தடை செய்யவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை அவுஸ்திரேலியாவில் டிசம்பர் – பெப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதி, கோடை காலமாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

17
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg