உலகளவில் அதிக சம்பளம் பெறுகிற கால்பந்து வீரர் இவர்தான்!
Updated: 11:42 GMT, Dec 29, 2016 | Published: 11:42 GMT, Dec 29, 2016 |
0 Comments
1512
This post was written by : Anojkiyan

உலகளவில் அதிக சம்பளம் பெறுகிற கால்பந்து வீரர் என்ற பெருமையை அர்ஜெண்டினா கால்பந்து அணியின் வீரர் கார்லோஸ் டெவெஸ் பெற்றுள்ளார்.
சீன கால்பந்து கழக அணியான சாங்காய் சென்ஹூவாவுடன் சமீபத்தில் ஒப்பந்தம் செய்துக்கொண்ட கார்லோஸ் டெவெஸ்க்கு ஒரு சீசனுக்கு 40 மில்லியன் டொலர்கள் சம்பளம் வழங்கப்படவுள்ளது.
இதன் மூலம் கால்பந்து உலகில் அதிக சம்பளம் பெற்ற வீரர் என்கிற பெருமையைப் கார்லோஸ் பெறுகிறார்.
இதற்கு முன்னதாக அர்ஜெண்டினாவின் போகா ஜூனியர்ஸ் அணியில் கார்லோஸ் விளையாடியமை குறிப்பிடத்தக்கது.