Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யுத்தத்தின்போது கட்டளைகளை வழங்கியவர்களே பொறுப்புக்கூற வேண்டும்: சம்பந்தன்

In இலங்கை
Updated: 09:35 GMT, Jan 4, 2017 | Published: 08:46 GMT, Jan 4, 2017 |
0 Comments
1555
This post was written by : Varshini

யுத்தத்தின்போது அதற்கான கட்டளைகளை வழங்கியவர்களே குற்றங்களுக்கு பொறுப்புக்கூறவேண்டுமென தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நாம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை கோரி நிற்கின்றோமே தவிர பழிவாங்க முயற்சிக்கவில்லையென குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் மக்களின் கருத்தறியும் செயலணியின் இறுதி அறிக்கை நேற்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் வெளியிடப்பட்டதையடுத்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார்.

போர்க்குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகளை நியமிக்க முடியாதென ஜனாதிபதி மைத்திரி கூறியுள்ளதை இதன்போது சுட்டிக்காட்டிய சம்பந்தன், இலங்கையின் நீதித்துறை சுயாதீனமாக உள்ளதென ஜனாதிபதி நினைப்பதால் அவ்வாறு கூறியிருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

எனினும், போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பாக அமைக்கப்படும் விசாரணை பொறிமுறையானது நம்பகத்தன்மை வாய்ந்ததென கருதி ஏற்றுக்கொள்வதற்கு பாதிக்கப்பட்ட தரப்பினர் மறுப்பார்களாயின், என்ன நோக்கத்திற்காக விசாரணை பொறிமுறை அமைக்கப்படுகிறதோ அந்த நோக்கம் நிறைவேறாதென சம்பந்தன் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை போர்க்குற்ற விசாரணை தொடர்பில் இராணுவத்தினர் பீதியடைந்துள்ளனர் என குறிப்பிட்ட சம்பந்தன், யுத்த காலத்தில் இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் சரணடைந்தவர்களை கொலை செய்த குற்றங்களுக்கு இராணுவத்தினரே பொறுப்புக்கூற வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு, யுத்தத்தின்போது நிகழ்ந்த வேறு குற்றங்களுக்கு அதற்கான கட்டளைகளை வழங்கியவர்களே பொறுப்புக்கூற வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg