Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

சார்ளி கெப்டோ நினைவு நிகழ்வுகள் ஐரோப்பா முழுவதும் முன்னெடுப்பு

In
Published: 08:55 GMT, Jan 8, 2017 |
0 Comments
1179
This post was written by : Sambavi

பிரான்ஸில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சார்ளி கெப்டோ பத்திரிகை நிறுவன தாக்குதல் சம்பவத்திற்கு நினைவுகூறும் பல்வேறு அஞ்சலி நிகழ்வுகள் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவின் பல இடங்களிலும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

11 ஊடகவியலாளர்கள் மற்றும் 1 பொலிஸ் பாதுகாவலர் என 12 பேருடைய உயிர்களை பலிகொண்ட தீவிரவாதிகளின் சார்ளி கெப்டோ நிறுவனம் மீதான துப்பாக்கித் தாக்குதல் நிகழ்ந்து நேற்றுடன் (சனிக்கிழமை) 2 வருடங்கள் பூர்த்தியானது.

இந்த நிலையில், அதனை அனுஷ்டிக்கும் வகையிலும், தீவிரவாதத்திற்கு எதிரான ஒற்றைமையை வலியுறுத்தும் வகையிலும் இந்த நினைவு தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஐ.எஸ். தீவிரவாதிகள் இருவரால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான இத் தாக்குதல் உலக அளவில் அச்சுறுத்தலாகவும், ஊடக சுதந்திரத்திற்கு சவால் விடுப்பதாகவும் அமைந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Delivered by FeedBurner