Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை: டானியல் மெத்வதேவ்

In டெனிஸ்
Published: 10:44 GMT, Jan 8, 2017 |
0 Comments
1135
This post was written by : Surenth
denial-methvathev

தனக்குள் ஏற்பட்டிருக்கும் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை என டானியல் மெத்வதேவ் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரொபர்ட்டோ பெளதிஸ்டா அகுட், ரஷ்யாவின் டானியல் மெத்வதேவ் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

இது குறித்து நேற்று கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இதன் போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இப்போது எனக்குள் ஏற்பட்டிருக்கும் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை.

இதுவரை விளையாடிய மற்ற ஆட்டங்களைப் போன்றே இறுதிச் சுற்றையும் அணுகுவேன். அதில் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பேன்.

கடந்த தொடரில் நான் சிறப்பாக ஆடியபோதும் என்னால் சேலஞ்சர் போட்டியில் கூட இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியவில்லை.

கடந்த சீசனின் இறுதியில் கிடைத்த ஓய்வு நேரத்தில் கடுமையாக பயிற்சி பெற்றதன் மூலம் இப்போது ஏ.டி.பி போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறேன்.

பக் ஹாண்ட், போர்ஹாண்ட் , சேர்விஸ் என எல்லா விடயங்களிலும் எனது ஆட்டம் மேம்பட்டிருப்பதை உணர முடிகிறது” எனவும் அவர் தெரிவித்தார்.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.