Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படும்: சீமான் சூளுரை

In இந்தியா
Updated: 11:55 GMT, Jan 9, 2017 | Published: 08:46 GMT, Jan 9, 2017 |
0 Comments
1216
icon_com
This post was written by : Surenth
jallikattu

ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை மீறி, இந்த ஆண்டு பொங்கலுக்குள் ஜல்லிக்கட்டை நடத்துவோம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சூளுரை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

”இந்த ஆண்டு தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம். ஆனால் எப்போது, எங்கே நடத்தப்படும் என்ற தகவலை நான் முன்கூட்டியே அறிவிக்கப்போவதில்லை.

கடந்த முறை தெரியப்படுத்தியதால் தான், என்னைக் கைது செய்தார்கள். இந்த முறையும் என்னைக் கைது செய்யலாம். ஆனால் ஜல்லிக்கட்டு நடந்த பிறகு என்னைக் கைது செய்து செய்யுங்கள்.

கேரளாவில் யானைகளை ஓடச்செய்து போட்டிகள் நடத்துகின்றனர். இராணுவத்தில் ஒட்டகம், குதிரை போன்ற விலங்குகள் துன்புறுத்தப்படுகின்றன. இதெல்லாம் பீட்டா அமைப்புக்குத் தெரியவில்லையா?

ஜல்லிக்கட்டு என்பது உண்மையில் ஏறு தழுவல் தான். காளைகளை அணைத்து விளையாடும் போட்டி இது. அது உடனடியாக நடத்தப்பட வேண்டும்” எனவும் வலியுறுத்தினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg