Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

நடிகை கிம்மிடம் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் 16 பேர் கைது

In
Updated: 10:36 GMT, Jan 9, 2017 | Published: 10:33 GMT, Jan 9, 2017 |
0 Comments
1163
10

அமெரிக்காவின் புகழ்பெற்ற நடிகையும், கீப்பிங் அப் வித் த கர்டாஷியன்ஸ் (மKim Kardashian West) தொலைக்காட்சித் தொடர் புகழ் கிம் கர்டாஷியன் வெஸ்ட்டின் விலைமதிப்பற்ற ஆபரணங்கள் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தற்போது 16 பேர் பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

35 வயது நிரம்பிய குறித்த நடிகை, பிரான்ஸில் உள்ள பிரபல சொகுசு விடுதியொன்றில் தங்கியிருந்த போது, அவரது அறைக்குள் பொலிஸ் உடையணிந்த இருவர் துப்பாக்கியுடன் நுழைந்து, நடிகை கிம்மை குளியலறையல் வைத்து பூட்டிவிட்டு அங்கிருந்த சுமார் 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதி வாய்ந்த ஆபரணங்களை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் கடந்த வருடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அந்த  சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பிரான்ஸ் பொலிஸார், கொள்ளைச் சம்பவம் மேற்கொள்ளப்பட்ட இடத்திலிருந்து பெறப்பட்ட டி.என்.ஏ மாதிரிகளை மையமாகக் கொண்டே குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸில் கொள்ளைச் சம்பவங்களில் அடிக்கடி ஈடுபட்டு வந்த ஒருவரின் டி.என்.ஏ மாதிரியுடன்  பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற டி.என்.ஏ மாதிரிகள் பொருந்தியதாக பிரான்ஸ் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸில் நடைபெற்ற பரிஸ் பெஷன் வீக்கில் (Paris Fashion Week) கலந்துகொள்ளும் பொருட்டு, கிம் தனது தாய் கிறிஸ் ஜென்னர் (Kris Jenner) மற்றும் சகோதரி கென்டால் ஜென்னர் (Kendall Jenner) ஆகியோருடன் பரிஸிற்கு சென்றிருந்த போதே குறித்த கொள்ளை சம்பவம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)