Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய அரசியல் யாப்பில் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட மாட்டாது: லால்காந்த

In இலங்கை
Published: 06:03 GMT, Jan 10, 2017 |
0 Comments
1107
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

சகல மக்களதும் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் புதிய அரசியல் யாப்பு அமையாதென்றும், சகல மக்களும் இணைந்த ஒரு மக்களாட்சியால் மாத்திரமே அதனை   ஏற்படுத்த முடியுமென்றும் மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்

”நாட்டிற்கு புதிய அரசியல் யாப்பொன்று அவசியம். குறித்த அரசியல் யாப்பின் ஊடாக இந்நாட்டின் சகல மக்களதும் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆனால் தற்போதைய அரசாங்கத்தாலோ முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியாலோ அல்லது வேறு எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட மாட்டாது.

பிரிவினைவாதத்தை ஏற்படுத்தவும் அல்லது குறிப்பிட்ட ஒரு இன, மத மக்களின் தேவைகளை பூர்த்திசெய்யவே அனைவரும் முயற்சிக்கின்றனர். இனிவரும் காலத்திலும் இதுதான் நடக்கப் போகின்றது. இவர்களால் சகல இன மக்களுக்கும் சமமான உரிமைகளை பெற்றுக்கொடுக்க முடியாது.

ஆகவே மூவின மக்களும் ஒன்றிணைந்து மக்கள் ஆட்சியொன்றை ஏற்படுத்தம் காலத்திலேயே சகல மக்களது உரிமைகளும் பேணப்படும் அரசியல் யாப்பொன்று ஏற்படுத்தப்படும்” என்றார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg