Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒன்றியத்தின் விதிகளை ஏற்காத பட்சத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்: மெர்க்கெல்

In ஐரோப்பா
Updated: 07:30 GMT, Jan 10, 2017 | Published: 07:30 GMT, Jan 10, 2017 |
0 Comments
1425
This post was written by : Sylviya

பிரெக்சிற் பேச்சுவார்த்தையின் போது ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்ட நான்கு நிபந்தனைகளையும் பிரித்தானியா ஏற்க மறுக்கும் பட்சத்தில், ஒன்றியத்தின் தனிச் சந்தையில் பிரித்தானியா அங்கம் வகிப்பது தொடர்பில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என ஜேர்மனிய அதிபர் அங்கேலா மெர்க்கெல் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தனிச் சந்தையா? அல்லது எல்லைக் கட்டுப்பாடா? எனும் கேள்வியெழும் போது, எல்லைக் கட்டுப்பாட்டிற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று பொருள்படும் விதத்தில், பிரித்தானிய பிரதமர் தெரேசா மே அண்மையில் சில கருத்துக்களை தெரிவித்ததாகவும் மெர்க்கெல் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, ஐரோப்பிய ஒன்றியத்தின் நான்கு விதிகளை ஏற்கும் பட்சத்திலேயே ஒன்றியத்தின் தனிச் சந்தைக்குள் பிரித்தானியா நுழைய முடியும் என்பதை மெர்க்கெல் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg