Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிரதமரின் தன்னிச்சையான நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்பு: பினராயி விஜயன்

In இந்தியா
Updated: 05:28 GMT, Jan 11, 2017 | Published: 05:27 GMT, Jan 11, 2017 |
0 Comments
1116
icon_com
This post was written by : Shailu
pinarayi-vijayan

பண மதிப்பு நீக்கம் என்ற பிரதமரின் தன்னிச்சையான நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்று கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் 28-வது தேசிய மாநாடு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 8ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில்.,நேற்று (செவ்வாய்கிழமை) 3-வது நாள் மாநாடு இடம்பெற்றது.

மாநாட்டில் பல்வேறு நாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வங்கி கூட்டமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்துக்கொண்டார்.

பின்னர் உரையாற்றிய அவர் கூறுகையில், ‘ உயர் மதிப்புடைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நாணயத்தாள்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தமையானது, எந்த வித முன்யோசனையும் இன்றி, அவசரமாக எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை ஆகும்

பிரதமரின் இந்த தன்னிச்சையான நடவடிக்கையால் நாட்டின் முன்னேற்றம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. முக்கியமாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி பாதைக்கு சென்றுவிட்டது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 12.6 சதவீதம் என்ற நிலையில் இருந்த நாட்டின் பொருளாதாரம், தற்போது 7 சதவீதமாக குறைந்திருக்கிறது.

நாணயத்தாள்கள் செல்லாது என்ற நடவடிக்கையால் நாட்டில் உள்ள விவசாயிகள், ஏழை மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். தொழில் நிறுவனங்கள் முடங்கியுள்ளது. சிறுதொழில்கள் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு அறிவித்த வைத்தியநாதன் குழு பரிந்துரைகளை செயல்படுத்தாத காரணத்தினால் தான் எங்கள் மாநிலத்தில் கூட்டுறவு வங்கிகள் வலுவான நிலையில் உள்ளன.

அத்தோடு, இந்தியாவிலேயே கேரளா மாநிலம் இந்த விஷயத்தில் முன்னோடியாக இருக்கிறது.’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg