Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

நாணயத்தாள்கள் மதிப்பு நீக்கத்தால் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்: அருண் ஜெட்லி

In
Updated: 11:36 GMT, Jan 11, 2017 | Published: 09:01 GMT, Jan 11, 2017 |
0 Comments
1103
This post was written by : Shailu
Arun-Jaitley

பழைய 500 மற்றும் 1000 நாணயத்தாள்கள் மதிப்பு நீக்கத்தால் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களுக்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,

அரசு நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையை கொண்டு வருவதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கின்றது. எனவே மறைமுக பொருளாதாரம் வளர்வதை அனுமதிக்க முடியாது.

சரக்கு சேவை வரி மற்றும் நாணயத்தாள்கள் மதிப்பு நீக்கம் வளர்ச்சிக்கானதே. இதற்கான பலன் இந்த ஆண்டே கிடைக்கும்.

நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைக்க தைரியமான சீர்திருத்த முடிவுகள் அவசியம் எனவே, கடினமான கட்டங்களை, கடினமான முடிவுகள் மூலம் கடந்துவிட்டோம்.

அதிகப்படியான காகித பணங்கள் திறமைகளையும், தூண்டுதல்களையும் ஏற்படுத்தும். பணமதிப்பு நீக்கத்தால் மொத்த உள்நாட்டு உற்பத்தி நேர்மையானதாகவும், அதிகமாகவும் இருக்கும்.’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.