Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உத்தர பிரதேசத்தில் 184 கிலோ வெள்ளி பறிமுதல்

In இந்தியா
Updated: 11:00 GMT, Jan 11, 2017 | Published: 11:00 GMT, Jan 11, 2017 |
0 Comments
1218
This post was written by : Shailu

உத்தர பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 184 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்திற்கு நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

இவ்வாறு நேற்றும் (செவ்வாய்க்கிழமை) வாகன சோதனை மேற்கொள்ளப்பட்ட போது ஒரு வேனில் இருந்து சுமார் 184 கிலோ வெள்ளி பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

‘வாகன சோதனையின் போது வான் ஒன்றிலிருந்து 184 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளி வேறுவொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படவிருந்த நிலையில் கைபற்றப்பட்டுள்ளது.

அத்தோடு, குறித்த சம்பவத்தில் ஈடுப்பட்ட நபர்களிடமிருந்து பல ஆவணங்கள் கைபற்றபட்ட நிலையில், அவை விசாரணைகளுக்காக சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கைபற்றப்பட்ட வெள்ளியின் பெறுமதி சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரம் அமெரிக்க டொலர் என கூறப்படுகின்றது

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg