Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

இந்திய – இங்கிலாந்து போட்டிகள் திட்மிட்டபடி நடைபெறும்: லோதா குழு உறுதி

In
Updated: 09:41 GMT, Jan 12, 2017 | Published: 09:40 GMT, Jan 12, 2017 |
0 Comments
1059
This post was written by : Sambavi
50437530

இந்தியா – இங்கிலாந்து ஒருநாள் மற்றும் ருவென்டி ருவென்டி தொடருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் போட்டிகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெறும் என்று லோதா குழு இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது.

இந்தியா – இங்கிலாந்து ஒருநாள் மற்றும் ருவென்டி ருவென்டி தொடர் நடைபெறுவதில் பிரச்சினை இருப்பதாகவும், போட்டியை ரத்து செய்து விடுமாறும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைவர் ஜைல்ஸ் கிளார்க்கிடம், உச்ச நீதிமன்றத்தினால் பதவி நீக்கப்பட்ட அஜய் ஷிர்கே தெரிவித்து இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளிவந்தன.

இதைத் தொடர்ந்து ஜைல்ஸ் கிளார்க், கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோக்ரிக்கு இமெயில் மூலம் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ‘ஷிர்கேயிடம் இருந்து எனக்கு தகவல் வந்தது. அவர் கிரிக்கெட் வாரிய செயலாளராக இல்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஒரு நாள் தொடர் நடைபெறுமா? என்பதை உறுதி செய்யவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும், இந்தப் போட்டிக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று லோதா குழு தெரிவித்துள்ளது.

‘இந்தியா – இங்கிலாந்து ஒருநாள் மற்றும் ருவென்டி ருவென்டி தொடருக்கு எந்த பாதிப்பும் இல்லை. போட்டிகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெறும். தற்போது கிரிக்கெட் வாரியத்தை நிர்வகிக்கும் அதிகாரம் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோக்ரியிடம் லோதா குழு ஒப்படைத்துள்ளது. அவரே அதிகாரம் மிக்கவர். இதில் எந்த சந்தேகமும் இல்லை. கிரிக்கெட் போட்டியை பாதிக்க எந்த வகையிலும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’ என லோதா குழு தெரிவித்துள்ளது.