Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

அமெரிக்க இராணுவத்தில் சேர்வதற்கு ஆர்வம்காட்டும் சீக்கியர்கள்

In
Updated: 10:34 GMT, Jan 12, 2017 | Published: 10:32 GMT, Jan 12, 2017 |
0 Comments
1078
This post was written by : Elakkiya
201701121346140866_More-Sikhs-now-planning-to-join-US-Army-after-new-rule_SECVPF

அமெரிக்க இராணுவத்தில் தலைப்பாகை, ஹிஜாப், தாடி உள்ளிட்டவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பெருமளவான சீக்கியர்கள் இராணுவத்தில் சேர்வதற்கு முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த சீக்கிய மற்றும் முஸ்ஸிம் இனத்தவர்களுக்கு அவர்களின் மத அடையாளங்களை சுதந்திரமாக பின்பற்றுவதற்கு அந்நாட்டு இராணுவம் அண்மையில் அனுமதி வழங்கியது.

இதற்கு முன்னதாக செயலர் நிலையிலான அதிகாரிகளுக்கு மாத்திரமே மத அடையாளங்களை பின்பற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அமெரிக்க இராணுவத்தின் இந்த அறிவிப்பால் பெருமளவான சீக்கியர்கள் இராணுவத்தில் சேர்வதற்கு திட்டமிட்டுள்ளதாக குரு கோபிந்த் சிங் அறக்கட்டளையின் செயலாளர் ராஜ்வந்த் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ”சீக்கியர்களைப் பொறுத்தவரை இது அமெரிக்காவில் வரலாற்று சிறப்புமிக்க நாளாகும். சரியான தருணத்தில் அமெரிக்க அரசு தனது கொள்கைகளை மாற்றியமைத்துள்ளது. இதற்காக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் இராணுவ செயலாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த அறிவிப்பால் சீக்கிய இளைஞர்கள் இராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்’ என்று தெரிவித்துள்ளார்.