Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஜல்லிக்கட்டு விவகாரம்: மத்திய, மாநில அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்

In இந்தியா
Updated: 10:36 GMT, Jan 12, 2017 | Published: 10:21 GMT, Jan 12, 2017 |
0 Comments
1102
icon_com
This post was written by : Shailu

ஜல்லிக்கட்டுக்கு போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசைக் கண்டித்து நாளை (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் உடனடியாக தீர்ப்பளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம்  மறுத்து விட்ட நிலையில், இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது கேள்விக்குறியாகி உள்ளது.

இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்றுத் தர தவறிய மத்திய – மாநில அரசுகளை கண்டித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், நாளை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.குறித்த ஆர்ப்பாட்டமானது, சென்னை மாவட்ட அலுவலகம் முன்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகிக்கின்ற நிலையில் தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள். அத்தோடு தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களிலும் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg