Chrome Badge

வாழ்வாதார உதவிகளை பெற்றுக்கொண்டு முறையற்ற விதத்தில் பயன்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை

In
Published: 10:53 GMT, Jan 12, 2017 |
0 Comments
1024
Vaharai DS Rahulanayahi SR

வீடு மற்றும் பல வாழ்வாதார உதவிகளை பெற்றுக்கொண்டு அவற்றை பராமரிக்காமல் அல்லது முறையற்ற ரீதியில் பயன்படுத்துவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு வாகரை பிரதேச அனர்த்த செயலணி தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி தெரவித்துள்ளார்.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் வழங்கப்பட்டுள்ள வீடுகள் மற்றும் வாழ்வாதார உதவிகளை சிலர் முறையற்ற ரீதியில் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அவரிடம் வினவியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

குறிப்பாக உதவித்திட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட வீடுகளை பாழடைந்த நிலையில் வைத்துவிட்டு சிலர் வேறு பிரதேசங்களுக்குச் சென்று வாழ்வதாக குறிப்பிட்ட பிரதேச செயலாளர் ராகுலநாயகி, இவ்வாறானவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் வீட்டு வசதி மற்றும் வாழ்வாதார தேவைகளை பூர்த்திசெய்வது தொடர்பாக வாகரை பிரதேச அனர்த்த செயலணி கவனம் செலுத்தி வருவதாக பிரதேச செயலாளர் ராகுலநாயகி மேலும் தெரிவித்தார்.

vaharai (1)

vaharai (2)

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)